ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
ஒரு படத்தில் இடம்பெற்ற பாடல் வரியையோ... பன்ச் டயலாக்கையோ படத்தின் தலைப்பாக வைப்பது புதிய விஷயமில்லை. அந்த வரிசையில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் 'நெருப்புடா' படமும் சேர்ந்துள்ளது. கபாலி படத்தில் ரஜினி பேசும் வசனம் என்பதற்காக மட்டும் இந்த டைட்டிலை வைக்கவில்லையாம்.
'நெருப்புடா' படத்தில் தீயணைப்பு வண்டியின் டிரைவராக நடிக்கிறாராம் விக்ரம் பிரபு. அதுமட்டுமல்ல ரஜினியின் தீவிர ரசிகராகவும் நடிக்கிறார். அதனாலேயே நெருப்புடா என்ற தலைப்பை வைத்தார்களாம். இது விக்ரம் பிரபு சொந்தமாக துவங்கியுள்ள 'ஃபர்ஸ்ட ஆர்ட்டிஸ்ட்' என்ற பட நிறுவனம் சார்பில் உருவாகி வரும் படம்!
இதில் விக்ரம் பிரபுவுடன் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்து வருகிறார். அசோக் குமார் என்ற புதுமுக இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார்.'ரோமியோ ஜூலியட்' படத்தை இயக்கிய லட்சுமணனிடம் உதவியாளராக இருந்தவராம் இவர். 'நெருப்புடா' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.