மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இதற்குத்தானே ஆசைப்பட்டாய், ரௌத்ரம் படங்களை இயக்கிய கோகுல் கார்த்தியை வைத்து இயக்கிய படம் - காஷ்மோரா. ட்ரீம்வாரியர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு தயாரித்துள்ள காஷ்மோரா கார்த்தி நடித்த படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.
சுமார் மூன்று வருடங்களாக்கு முன் தொடங்கப்பட்ட காஷ்மோரா படத்துக்கு மூன்று பிரம்மாண்டமான செட்கள் போடப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சி.ஜி. ஷாட்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளன. காஷ்மோரா படத்தில் காஷ்மோரா, ராஜ்நாயக் என இரண்டு வேடங்களில், மூன்று கெட்டப்களில் நடித்திருக்கிறார் கார்த்தி. ரத்னமாதேவி என்ற வேடத்தில் நயன்தாரா நடிக்க, பத்திரிகையாளராக நடிக்கிறார் ஸ்ரீதிவ்யா.
காஷ்மோராவின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டிரெய்லர் வெளியான பிறகு பாகுபலி போன்ற ஹிஸ்டாரிகல் சப்ஜெக்ட் கொண்ட படமாக இருக்குமோ என காஷ்மோரா பற்றி ரசிகர்கள் மத்தியில் எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. அதே எண்ணத்தில் ரசிகர்களுக்கு படம் பார்க்க வந்து அவர்களுக்கு ஏமாற்றமாகிவிடக் கூடாது என்பதால் காஷ்மோரா பற்றிய ரகசியத்தை உடைத்திருக்கிறார் கார்த்தி. அதாவது காஷ்மோ வழக்கமான பேய் படம்தானாம். வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே ஹிஸ்டாரிகல் பேக்ரவுண்டில் ப்ளாஸ்பேக் காட்சிகள் இடம்பெற்றுள்ளனவாம். அந்த ஏரியாவில்தான் நயன்தாரா கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறாராம்.