'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவில்லை என்றபோதும் அதிக படங்களில் நடிக்கும் நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர்களும் இவர்களும் -என்ற படத்தில் அறிமுகமான அவருக்கு அட்டகத்தி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, தர்மதுரை போன்ற படங்கள் சொல்லிக்கொள்ளும் வகையில் அமைந்த நிலையில், தற்போது மூன்றாம் தட்டு ஹீரோக்களின் படங்கள் என்றாலும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் கடலை, கட்டப்பாவை காணோம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இதற்கிடையே மலையாளப்படங்களிலும் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு அங்கே தமிழை விட இன்னும் அழுத்தமான பர்பாமென்ஸ் கொடுக்கக்கூடிய கதாபாத்திரங்கள் கிடைத்திருக்கிறதாம். அதனால் அதிக உற்சாகத்துடன் இருக்கும் அவர் சந்தோசம் காரணமாக அடிக்கடி வெயிட் போட்டு விடுகிறாராம். ஆனால் வெயிட்டை குறைக்கும் பொருட்டு அவர் ஜிம் பக்கமெல்லாம் செல்வதில்லையாம். ஓய்வு நேரங்களில் தனக்கு பிடித்தமான பாடல்களை போட்டு அதற்கேற்ப வீட்டிற்குள்ளேயே நடனமாடுகிறாராம் ஐஸ்வர்யா ராஜேஷ். மானாட மயிலாட புகழ் டான்சரான அவருக்கு நடனம்தான் அதிகமாக பிடித்த விசயமாம். அதனால், தனது வெயிட்டை குறைக்க ஜிம்னாஸ்டிக், உணவுக்கட்டுப் பாடு என்பதை தாண்டி நடனமாடி வெயிட்டை குறைத்து உடம்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.