விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை சமந்தா காதலிப்பதாகவும் திருமணம் குறித்த ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இலைமறை காய்மறையாக நாகசைதன்யா குடும்பத்தினர் இதனை ஒப்புக்கொண்ட போதிலும் சமந்தா இதுவரை தன் காதல் விவகாரம் குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் நாகசைதன்யாவுடன் பாட்மின்ட்டன் விளையாடும் புகைப்படத்தை சமந்தா வெளியிட்டுள்ளார்.
அதில், தான் ஜெயித்ததாகவும், நாகசைதன்யா விளையாட்டில் தோற்றுவிட்டதாகவும் புகைப்படத்தில் குறிப்பிட்டு அதனை டுவிட்டரில் வெளியிட்டுள்ள சமந்தா, தான் பிவி சிந்துவை முன்னுதாரணமாகக் கொண்டு ஜெயித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வெற்றிக்கு சமந்தாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ள குப்தா சாவ்லாவிடம் தான் ஏமாற்றி ஜெயித்ததாக கூறியுள்ளார். அண்மையில் வெளிவந்த தெலுங்கு பிரேமம் படத்தில் நடித்த நாகசைதன்யா அப்படத்தின் வெற்றியை சமந்தாவுடன் கொண்டாடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.