விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
சின்ன சின்ன காமெடி கேரக்டர்களில் நடித்து வந்த ‛லொள்ளுசபா' ஜீவா ஹீரோவாக அறிமுகமாகும் படம் ஆரம்பமே அட்டகாசம். சங்கீதா பட் என்பவர் ஜோடியாக நடித்துள்ளார். இவர்கள் தவிர பாண்டியராஜன், ஞானசம்பந்தன், வையாபுரி, சாம்ஸ், ஸ்ரீநாத் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.சுவாதி பிலிம்ஸ் தயாரித்துள்ள படத்தை ரங்கா இயக்கி உள்ளார்.
இதன் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியீட்டு விழா எஸ்.ஐ.டி.கல்லூரியில் நடந்தது.
இயக்குனர் கே.பாக்யராஜ் டீசரை வெளியிட்டு பேசியதாவது: சின்னத்திரையிலிருந்து வருகிறவர்கள் நல்ல பயிற்சியுடன் வருவதால் பெரிய திரையில் நிறைய சாதிக்கிறார்கள், அந்த வகையில் ஜீவாவின் வருகை ஆரம்பமே அட்டகாசமாக இருக்கிறது. படத்தை பார்த்தேன். முதல் படத்திலேயே லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்திருக்கிறார். ஜீவாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றார்.