விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
ஏறுதழுவல் என்று சொல்லப்படும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் ஒரு விளையாட்டாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் பல நூற்றாண்டு களாக தமிழர்களின் வாழ்வோடு கலந்து போன இந்த விளையாட்டை நடத்த சில ஆண்டுகளாக நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கி விடும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அந்த தடை விலகவில்லை. அதனால் இப்போதுவரை ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும் என தென்மாவட்டங்களில் அவ்வப்போது போர்க்கொடி பிடித்து வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தற்போது இளமி என்றொரு படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. சாட்டை யுவன், அனுகிருஷ்ணா, கிஷோர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் 13-ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதையாக உருவாகியிருக்கிறது. ஜல்லிக்கட்டுதான் இந்த படத்தின் மையக்கருவாக உள்ளதாம். அதனால் படத்தில் ஜல்லிக்கட்டு காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாம். மேலும், அடுத்த மாதம் இப்படத்தின் ஆடியோ விழாவை மதுரையில் ஜல்லிக்கட்டு நடக்கும் மைதானத்தில் நடத்தவும் திட்டமிட்டுள்ளார்களாம்.