மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கானல் நீர் என்ற படத்தின் மூலம் 2007 ஆம் ஆண்டு கோடம்பாக்கத்துக்கு வந்தவர் ஜே.கே.ரித்தீஷ். அதன் பிறகு நாயகன் என்ற படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்தவர் பின்னர் அரசியலுக்குப்போனதால் கோடம்பாக்கம் பக்கமே வரவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சங்க தேர்தல் நேரத்தில் விஷால் அணி வெற்றிபெற உறுதுணையாக இருந்தார்.
இந்நிலையில் சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு தனது தயாரிப்பு நிறுவனம் சாகியா செல்லுலாய்ட்ஸ் மூலம் "தப்பாட்டம்" எனும் படத்தை தயாரிக்கிறார். புதுமுகங்கள் துரை சுதாகர், டோனா ரோசாரியோ ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் இப்படத்தின்
இயக்குனர் முஜிபூர், துளசி ரூபி ஜெயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தப்படிக்கும் கலைஞனுக்கும், ஒப்பாரி வைக்கும் பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. இருவரும் ஊரே மெச்சும் சிறந்த தம்பதியாக வாழ்கின்றனர். இவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராவிதமாக ஒரு சம்பவம் நிகழ்ந்து இவர்களது உறவில் பிளவை ஏற்படுத்துகிறது. இருவராலும் பிரச்சனைகளை சமாளிக்க முடிந்ததா, மீண்டு வந்தார்களா என்பதை அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படி மிகவும் எதார்த்தமாக வடிவமைத்துள்ளார் இப்படத்தின் இயக்குனர் முஜிபூர். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து 1980 பிண்ணனிகளில் நடக்கும்படியாக கதை இடம்பெற்றுள்ளது.
பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, சென்னை, திருவனந்தபுரம், நாகர்கோயில் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் வேளையில், படக்குழுவினர் இப்படத்தை தீபாவளி தினத்தன்று வெளியீட மும்முரமாக செயல்ப்பட்டு வருகின்றனர்.
இதுஒருபுறம் இருக்க நடிகர் சங்க பதவியை பிடித்ததை அடுத்து விரைவில் நடைபெற உள்ள தயாரிப்பாளர் சங்க பதவியைப் பிடிக்க தயாராகி வரும் நடிகர் சங்கத்தில் ரித்தீஷூம் போட்டியிட தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலில் முக்கிய பதவிகளுக்கு போட்டியிட வேண்டும் என்றால் கடந்த 5 வருடங்களில் படம் தயாரித்திருக்க வேண்டும். ரித்தீஷ் படம் தயாரித்து 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. எனவே தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காகவே அவச அவசரமாக 'தப்பாட்டம்' என் படத்தை தயாரிப்பதாக கோலிவுட்டில் ஒருபேச்சு உலா வருகிறது.