மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இந்த ஆண்டில் சமந்தா நடித்ததில் தெறி, 24, பிரமோற்சவம், ஜனதா கேரேஜ் ஆகிய படங்கள் அவருக்கு வெற்றியாக அமைந்துள்ளன. ஆனால் அடுத்த படியாக அவரது கைவசம் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் படம் மட்டுமே உள்ளது. அந்த படமும் அடுத்த ஆண்டுதான் தொடங்குகிறது. இடைபட்ட நாட்களில் சமந்தா நடிப்பதற்கு படங்களே இல்லை.
ஆனபோதும், தன்னை தேடி வந்த சில படங்களை அவர் ஒத்துக்கொள்ளாமல் திருப்பி அனுப்பி விட்டாராம். ஆனால், அதையடுத்து சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் திருமணம் நடக்கயிருப்பதால்தான் அவர் தேடி வந்த படங்களை தவிர்த்து வருவதாக ஒரு செய்தி பரவியுள்ளது. ஆனால் சமந்தா அந்த படங்களை திருப்பி அனுப்பியதற்கு உண்மையான காரணம் அந்த படங்களின் கதை அவருக்கு பிடிக்காததுதானாம்.
தற்போது சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க நடிகையாகி விட்டதால், இனிமேல் தான் நடிக்கிற ஒவ்வொரு கேரக்டரும் பெயர் சொல்லும் வகையில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் சமந்தாவிடம், அவர் எதிர்பார்க்கிற மாதிரியான கதைகளை யாருமே சொல்லவில்லையாம். அதனால் நேரடியாகவே கதை பிடிக்கவில்லை என்று சொல்லி அனுப்பி விட்டாராம்.