விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
கங்காரு, வந்தாமல, கோடைமழை ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்ரீபிரியங்கா. அதையடுத்து சாரல், ரீங்காரம், திருப்பதி லட்டு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சாரல் படம் முடிந்து எப்போதோ ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படத்தில் நாயகனாக ஆதித்யா சேனல் தொகுப்பாளர் அசார் நடிக்க, நாயகியாக பிரியங்கா நடித்துள்ளார். ஒரு பேருந்து பயணத்தின்போது ஏற்படும் காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் ஓரளவு கிளாமராகவும் நடித்துள்ளார் ஸ்ரீபிரியங்கா.
மேலும், இந்த படத்தில் நடிக்கும்போது ஸ்ரீபிரியங்காவாக இருந்த அவர் பின்னர் ஸ்ரீஜாவாக தனது பெயரை மாற்றிக்கொண்டார். அதோடு சாரல் படத்தின் ஆடியோ விழாவுக்கு வந்த விஜயசேதுபதி முன்பு, தமிழ் சினிமாவில் தமிழ்ப் பெண்களை யாரும் ஆதரிப்பதில்லை என்றும் பீல் பண்ணியபடி பேசினார் ஸ்ரீபிரியங்கா. அதைப்பார்த்த விஜயசேதுபதி கவலைப்படாதீங்க. கண்டிப்பா உங்களுக்கு நல்ல வாய்ப்பு வரும் என்று நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.
ஆனபோதும் இன்னும் புதிதாக எந்த படவாய்ப்பும் ஸ்ரீஜாவுக்கு வந்தபாடில்லை. அதனால் தற்போது ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் சாரல் படத்தை எதிர் பார்க்கிறார் அவர். அதோடு, இதுவரை இப்படித்தான் நடிப்பேன். நான் தமிழ்ப் பெண் என்கிற கண்டிசன்களை சொல்லி கதை கேட்டு வந்தவர், தற்போது கண்டிசன்களை தளர்த்தி, இனிமேல் நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை நான் முடிவு செய்ய மாட்டேன. கதைகள்தான் முடிவு செய்யும் என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்து வருகிறார் ஸ்ரீஜா.