விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
'த்ரிஷா இல்லானா நயன்தாரா' என்ற ஆபாசப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ஏஏஏ என்கிற 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை தயாரிப்பவர் மைக்கேல் ராயப்பன். முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் தற்போது ஆளுங்கட்சியில் இருக்கிறார்.
படப்பிடிப்புக்கு மட்டம் போடுதல் போன்றவைகள் எல்லாது கூடாது என்று ஏகப்பட்ட கண்டிஷன் போட்டு படத்தை ஆரம்பித்துள்ளார் ராயப்பன். இதனால் அதனால் ஒழுங்காக படப்பிடிப்புக்கு வந்து போகிறாராம் சிம்பு.
இதனிடையே இந்தப் படத்தில் சிம்புவுக்கு மூன்று வேடங்கள். ஒரு கேரக்டருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் முடிந்து விட்டதாம்! சிம்புவின் இன்னொரு கேரக்டருக்கு ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியிருக்கிறார். சிம்புவுடன் தமன்னா இணைந்து நடிக்கும் முதல் படம் இது. ஸ்ரேயா, தமன்னா தவிர சிம்புவுக்கு இன்னொரு ஜோடியும் உண்டு. அந்த கேரக்டரில் நடிக்க ஹன்சிகாவுக்கு தூது விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.