மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
புதுமுக இயக்குனர் இசக்கி கார்வண்ணன் இயக்கி உள்ள படம் பகிரி. இதில் பிரபு ரணவீரன், ஷார்வியா என்ற புதுமுகங்கள் ஹீரோ, ஹீரோயின்களாக அறிமுகமாகிறார்கள், இவர்கள் தவிர ரவிமரியா, ஏ.வெங்கடேஷ், சரவண சுப்பையா, டி.பி.கஜேந்திரன், மாரிமுத்து, பாலசந்திரன் உள்பட 10 இயக்குனர்கள் நடித்திருக்கிறார்கள். வீரகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், கருணாஸ் இசை அமைத்துள்ளார்.
சென்னை புறநகரில் இருந்து வேலை தேடி சென்னை நகருக்குள் வரும் ஒரு இளைஞன் வேலையையும், காதலையும் தேடுகிறார். அதை சுற்றி நடக்கிற கதை. வாட்ஸ்-அப் அவனது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தணிக்கைக்கு சென்றது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ஏ சான்றிதழ் தருவதாக சொன்னார்கள். சில காட்சிகளை நீக்கினால் யூஏ சான்றிதழ் தருவதாக கூறியிருக்கிறார்கள். அவர்கள் 18 கட் கொடுத்தார்கள். அவைகள் கதையை பாதிக்காத காட்சிகள் என்பதால் அதற்கு ஒப்புக்கொண்டு காட்சிகளை நீக்கி யு/ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள். ஒயிட்ஸ்கிரீன் என்ற நிறுவனம் வருகிற 9ந் தேதி படத்தை வெளியிடுகிறது.