மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஆட்சி மாறினால், காட்சிகளும் மாற வேண்டும் என்பதுதானே நியதி. அந்த நியதிக்கு உதயநிதி மட்டும் விதிவிலக்கா என்ன? அவர் நடித்து வரும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு முன்பு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தவர்கள், இப்போது ரெட் சிக்னல் போட்டு சூட்டிங்கிற்கு தடை போட்டு வருகிறார்கள் என்பதுதான் வேதனை.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் கதாநாயகனாக நடிக்கும் படம் என்பதால் கடந்த ஆட்சியின்போது சென்னையில் எங்கு வேண்டுமானாலும் படப்பிடிப்பு நடத்த தாராளம் காட்டப்பட்டது. இப்போது அதெல்லாம் அந்தக் காலம் என்று சொல்லும்படி ஆகியிருக்கிறதாம் நிலைமை. முன்பு சூட்டிங் எடுத்த அதே சாலைகளிலும், கட்டிடங்களிலும் மீண்டும் பேட்ச் வெர்ர்க் என்று சொல்லப்படும் விடுபட்ட காட்சிகளை எடுக்க வேண்டுமாம். ஆனால் போய் பர்மிஷன் கேட்டால், இங்கெல்லாம் எடுக்கக் கூடாதே என்கிறார்களாம். சென்னையில் பிரதான இடத்தில் அமைந்திருக்கும் தியேட்டர் ஒன்றில் சில காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். அப்போது வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்று தியேட்டரை தந்த நிர்வாகம், இப்போது போய் நின்றால், தயவு செய்து வராதீங்க. எங்கயாவது காட்சியை படமாக்கிக்கோங்க என்கிறார்களாம். இதனால், சிக்கலில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது ஒ.கே. ஓ.கே. டீம்!