நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார்- விஷால் அணிகள் மோதிக்கொண்ட நிலையில், அவர்களுக்கிடையிலான பஞ்சாய்த்துக்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதன்காரணமாக சமீபத்தில் நடைபெற்ற ராதிகா மகள் ரேயானின் திருமண நிகழ்ச்சியில் விஷால் அணியினர் யாரும் கலந்து கொள்ள வில்லை. அவர்கள் அழைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. அதோடு, சரத்குமாரின் மகளான வரலட்சுமியும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதுதான் பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.
இந்த நிலையில், விஷாலின் 38-வது பிறந்த நாள் விழாவில் ஒருநாள் முழுக்க அவருடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் வரலட்சுமி.
அதோடு, விஷாலுக்கு டுவிட்டரில் ஒரு முத்தமும் பிறந்த நாள் பரிசாக கொடுத் துள்ளார் வரலட்சுமி. இது டுவிட்டரில் வெளியானதை அடுத்து, அவர்களைப் பற்றிய திருமண செய்திகள் வெளியானபோது மறுப்பு தெரிவித்த போதும், இந்த முத்தம் அவர்களது திருமணத்தை உறுதிபடுத்துவது போல் இருப்பதாக இணைய தளங்களில் பரபரப்பு செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.