7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா |
வீராசாமி படத்திற்கு பிறகு ஆர்யா சூர்யா படத்தில் தகறு தகறு, விழித்திரு படத்தில் பப்பரப்பா ஆகிய பாடல்களில் நடனமாடிய டி.ராஜேந்தர், தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜயசேதுபதி நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், காதலும் கடந்து போகும் படத்தில் நாயகியாக நடித்த மடோனா செபஸ்டியன் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் டி.ராஜேந்தர் வில்லனாக நடித்து வருவதாக செய்திகள் பரவி வருகிறது. குறிப்பாக, இதுவரை காதலுக்காக உயிரையே கொடுத்து வந்த டி.ஆர்., இந்த படத்தில் காதலுக்கு எதிரியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து கே.வி.ஆனந்த் கூறுகையில், இந்த படத்தில் டி.ஆர்., நெகடீவ் காட்சிகளில் நடித்திருப்பதை மறுக்கவில்லை. அந்த வகையில், டி.ராஜேந்தர் மட்டுமின்றி விஜயசேதுபதியும் இந்த படத்தில் நெகடீவ் காட்சிகளில் நடித்துள்ளார். ஆக, இருவருமே பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டுவிதமாக பர்பாமென்ஸ் கொடுத்துள்ளனர். ஆனபோதும் படத்தில் இவர்கள் இருவரில் ஒருவர்தான் வில்லன். அது யார்? என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ். படம் திரைக்கு வரும்போது ரசிகர்கள் ஆச்சர்யப்படும் வகையில் படத்தின் வில்லன் யார் என்பது வெளிப்படும் என்கிறார் அவர்.