Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருப்பதியில் யுவனின் 2வது திருமணம் முடிந்தது : டாக்டரை மணந்தார்!!

01 செப், 2011 - 16:00 IST
எழுத்தின் அளவு:

பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, சென்னையை சேர்ந்த டாக்டர் ஷில்பாவை இன்று(01.09.11) 2வது திருமணம் செய்தார். திருப்பதியில் நடந்த இந்த திருமணத்தில், இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இசைஞானி இளையராஜாவின் 2வது மகன் யுவன் சங்கர் ராஜா. அப்பாவை போல் இவரும் இசையில் அசத்தி வருகிறார். தமிழில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இவருக்கும் சுஜயா என்பவருக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை 2 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2008ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதன்பின்னர் சிலகாலம் தனிமையில் வாழ்ந்து வந்த யுவனுக்கு, சென்னையை சேர்ந்த டாக்டர் ஷில்பா என்பவரின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் நட்பாக பழகியவர்கள் பின்னர் காதலிக்கத் தொடங்கினார். மிக ரகசியமாக இருந்து வந்த இவர்களது காதலுக்கு, இருவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து இருவருக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி திருப்பதியில் இன்று (01.09.11) காலை யுவன்சங்கர் ராஜாவுக்கும், ஷில்பாவுக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் யுவனின் தந்தை இளையராஜா மற்றும் நெருக்கமான உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். நடிகர்கள் பிரேம்ஜி, கிருஷ்ணா, வைபவ், பஞ்சுசுப்பு, சிவா, இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, பவதாரணி உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நாளை(02.09.11) நடக்க இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

bab - saudi,இந்தியா
03 செப், 2011 - 13:16 Report Abuse
 bab காசு இருந்தா ஆயிரம் பொண்டாட்டி கிடைக்கும் இதுக்கு இவர் மட்டும் என்ன விதி விளக்கா
Rate this:
Joshna - chennai,இந்தியா
02 செப், 2011 - 22:50 Report Abuse
 Joshna சுஜயா, தப்பிச்சதுக்கு சந்தோஷபடுங்க. கண்ணீர் மட்டும் விட்டுடாதிங்க....
Rate this:
sivanesan - madurai,இந்தியா
02 செப், 2011 - 21:21 Report Abuse
 sivanesan valga pallandu!!!!!!!!!!
Rate this:
விக்கி - Madurai,இந்தியா
02 செப், 2011 - 20:56 Report Abuse
 விக்கி இதயயாவது உருபடிய வச்சுகோ .......!
Rate this:
mangatha - atthipatti,இந்தியா
02 செப், 2011 - 14:42 Report Abuse
 mangatha sari sari,athukuthane marriage,,
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in