மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நிக்கி கல்ராணி தமிழில் அறிமுகமானது என்னவோ ஆதியின் யாகவராயினும் நாகாக்க படம்தான் என்றபோதும், ஜி.வி.பிரகாசுடன் இணைந்து அவர் நடித்த இரண்டாவது படமான டார்லிங்தான் முதலில் திரைக்கு வந்தது. அந்த படத்தில் பேய் வேடத்தில் நடித்திருந்தார் நிக்கி கல்ராணி. அந்த படம் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து பல புதிய படங்களில் கமிட்டானார் அவர். கோ-2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ஆகிய படங்களில் நடித்தவர், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், நெருப்புடா,
கீ என பல படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.
மேலும், டார்லிங் படத்திற்கு பிறகு நிக்கி கல்ராணியை தேடி பல பேய் கதைகள் முற்றுகையிட்டதாம். டார்லிங் படம் வெற்றி பெற்றபோதும், தொடர்ந்து அந்த மாதிரியான கதைகளில் நடித்தால் பேய் பட நடிகை என்று முத்திரை குத்தி விடுவார்கள் என்றுதான் அந்த படங்களை ஏற்கவில்லையாம் நிக்கி. அதேசமயம், மீண்டும் பேய் கதைகளில் நடித்தாலும் பழி வாங்குவது போன்ற வேடங்கள் இல்லாமல் மாறுபட்ட கதாபாத்திரங்கள் என்றால் நடிக்க தயாராக இருப்பதாக சொல்லும் நிக்கி கல்ராணி, தற்போது தான் நடித்துள்ள மொட்ட சிவா கெட்ட சிவா, கடவுள் இருக்கான் குமாரு, நெருப்புடா ஆகிய படங்களில் கவர்ச்சி கதாநாயகி என்றபோதும், பாடல் காட்சிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிரடி நடனமாடியுள்ளாராம். அதனால் இந்த படங்களுக்குப்பிறகு தனக்கு அதிகப் படியான இளவட்ட ரசிகர்கள் தமிழில் கிடைப்பார்கள் என்கிறார் நிக்கி.