'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
உலக மக்களால் அடுத்து எதிர்பார்க்கப்படும் ஹாலிவுட் படம் டோண்ட் ப்ரீத். இதில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஸ்டீபன் லாங் பார்வையற்ற முன்னாள் அமெரிக்க ராணுவ வீரராக நடித்துள்ளார். இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா? பார்வையற்றவராக நடிக்க தன் கண் பார்வையை மங்கச் செய்யும் லென்ஸ் அணிந்து நிஜமான பார்வையற்றவராக மாறி நடித்திருக்கிறார். ஸ்பீன் லாங்கின் இந்த செயல் உலக அளவில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இது பற்றி ஸ்டீபன் லாங் கூறியிருப்பதாவது: போரில் ஏற்பட்ட காயத்தால் அவருக்கு பார்வை பறிபோயிருக்கும். வெடித்து சிதறிய உலோகத்துண்டு ஒன்று அவரது கண்ணை தாக்கியிருக்கும். எனவே இது கண்பார்வை அற்றவராக பிறந்தவரைப் போல் அல்ல. அது சாதரணமான கண்களும் அல்ல. அவை வெடிகுண்டால் தாக்கப்பட்டவை. அதை என்னால் சாதரணமாக செய்ய முடியாது. எனவே அதற்காக ஒரு லென்ஸை உருவாக்க வேண்டும். அதை சிறப்பாக உருவாக்கித் தந்தார்கள். ஜாம்பி படங்களில் வருவது போலவே, பேய் படங்களைப் போல வெறும் வெள்ளையாகவோ இந்த லென்ஸுகள் இருக்காது. லென்ஸ்கள் அணிந்திருந்தாலும் அதற்குப் பின் இருக்கும் கண்கள் தெரியும். ஆனால் அவை சரியான வடிவில் இருக்காது. நடிக்கும் போது வெறும் நிழலாக மட்டுமே தெரியும். அதனால் பார்வை குறைவு செய்து கொண்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஸ்டீபன் லாங்குடன் ஜேன் லெவி, டெலான் மின்னட்டே, டேனியர் ஸ்வாட்டோ ஆகியோர் நடித்துள்ளனர். கோஸ்ட் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை பெடரிக் அஸ்வரேஸ் இயக்கி உள்ளார். இவர் பிரபலமான ஈவில் டெத் படத்தை இயக்கியவர். வருகிற 26ந் தேதி அமெரிக்காவில் வெளியாகும் இந்தப் படம் இந்தியாவில் செப்டம்பர் 2ந் தேதி வெளிவருகிறது. இந்தியாவில் ஆங்கிலத்துடன் இந்தி, தமிழ், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவருகிறது.