நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் |
விஜய் ஆண்டனியின் கேரியரில் பிச்சைக்காரன் முக்கியமான படமாகியிருக்கிறது. அவரை டிஷ்யூம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்த இயக்குனர் சசியே அந்த படத்தையும் இயக்கியிருந்தார். அதோடு பரத் நடித்த 555 படத்தை இயக்கி தோல்வி கண்டதால் அடுத்து ஒரு ஹிட் படம் கொடுத்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருந்து வந்த சசிக்கு, விஜய் ஆண்டனியை வைத்து இயக்கிய பிச்சைக்காரன் படம் சூப்பர் ஹிட்டாகி இப்போது அவருக்கு மீண்டும் புதிய படங்களை பெற்றுக்கொடுத்திருக்கிறது.
மேலும், பிச்சைக்காரன் படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டபோது தமிழை போன்று அங்கும் சூப்பர் ஹிட்டாக ஓடி வசூல் சாதனை புரிந்து விட்டது. இதனால் அடுத்தபடியாக விஜய் ஆண்டனி நடித்து வரும் சைத்தான், எமன் படங்கள் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகி வருகிறது. இந்தநேரத்தில், பிச்சைக்காரன் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் வேலைகளும் நடக்கிறது. இன்னும் பத்து நாள் படப்பிடிப்பு நடந்தால் எமன் படம் முடிந்து விடும் நிலையில் உள்ளதால், அடுத்தபடியாக இந்தி பிச்சைக்காரனில் இறங்குகிறாராம் விஜய் ஆண்டனி.
ஆனால், இந்த படத்தை தமிழில் இயக்கிய சசியே இயக்குவாரா? இல்லை வேறு இந்தி இயக்குனர் இயக்குவாரா? இல்லை விஜய் ஆண்டனியே இயக்குனர் அவதாரம் எடுப்பாரா? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதுபற்றி விஜய் ஆண்டனி தரப்பில் விசாரித்தால், சசிதான் இயக்குவார் என்று சொல்ல மறுக்கிறார்கள். அதேசமயம், அந்த படத்தை இயக்குவது யார் என்பது விரைவில் தெரியும் என்று சஸ்பென்ஸ் வைக்கிறார்கள்.