நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? |
தமிழில் விருதகிரி, பில்லா-2, தெனாலிராமன் ஆகிய படங்களில் நடித்தவர் இந்தி நடிகை மீனாட்சி தீக்ஷித். தற்போது பயம் ஒரு பயணம், டக்கர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், விருதகிரி, பில்லா-2 படங்களைத் தொடர்ந்து தெனாலிராமன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த மீனாட்சி தீக்ஷித் அதன்பிறகு இப்போது பயம் ஒரு பயணம் -என்ற படத்தில் பேயாக நடித்துள்ளார்.
இதற்கு முன்பு தமிழில் தான் நடித்த படங்கள் பெரிய என்ட்ரியை கொடுக்காத நிலையில், இந்த பேய் படத்தை பெரிதாக எதிர்பார்க்கும் மீனாட்சி தீக்ஷித், அடுத்தபடியாக தமிழில் கூடுதல் கவனம் செலுத்தப்போகிறாராம். அதோடு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிப்பதற்காகவும் சில டைரக்டர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள மீனாட்சி தீக்ஷித், ஆபாசமற்ற கவர்ச்சியை வெளிப்படுத்தவும் தயார் கோலிவுட்டிலுள்ள சில கமர்சியல் பட டைரக்டர்களிடம் வாக்குறுதி அளித்துள்ளாராம்.