Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

களைகட்டிய தீபாவளி ரேஸ்

19 ஆக, 2016 - 15:30 IST
எழுத்தின் அளவு:
Diwali-race-begins-in-kollywood

முன்னணி ஹீரோக்களுடன் போட்டி போடாமல் தனித்து களமிறங்கி வசூல் அறுவடை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் இன்றைய இளம் ஹீரோக்கள். இந்த விஷயத்தில் போட்டிகளைப் பற்றி கவலைப்படாமல் களத்தில் இறங்குவது விஷால்தான். இப்போது இந்தப் பட்டியலில் தனுஷ் சேர்ந்துள்ளார்.


வழக்கமாக தீபாவளிக்கு முன்னணி ஹீரோக்களின் படங்கள் வராதா என்பதாக ரசிகர்களின் எதிர்பார்ப்பு இருக்கும். இந்த வருடத் தீபாவளிக்கு முன்னணி நடிகர்கள் நடித்த பெரிய படங்கள் வெளிவர இருக்கின்றன. 'காஷ்மோரா' படம் தீபாவளி ரிலீஸ் என அறிவித்து ரேஸில் முதல் ஆளாக நுழைந்தவர் கார்த்தி. கிட்டத்தட்ட 2 வருட காலமாக பிரம்மாண்டமாக உருவாகி வரும் பீரியட் ஃபேன்டஸி ஹாரர் படம் இது. கண்ணைக் கவரும் செட்கள், உயர்தர கிராபிக்ஸ் என 'காஷ்மோரா' படம் உருவாகி வருகிறது


கார்த்தியைத் தொடர்ந்து அவரின் நண்பரான விஷாலும் தீபாவளி ரேஸில் சமீபத்தில் இணைந்தார். சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி ஆகியோர் நடிக்கும் 'கத்தி சண்டை' படம் தீபாவளிக்கு வருகிறது. இவ்விரு படங்களைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் கொடி படமும் தீபாவளிக்கு வெளியாகிறது.


தனது 'கொடி' பட ரிலீஸ் தேதியை நேற்று தனுஷும் அறிவித்துள்ளார். ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ், த்ரிஷா, 'பிரேமம்' அனுபமா பரமேஸ்வரி ஆகியோர் நடித்துள்ள 'கொடி' படத்தை எஸ்கேப் மதன் வெளிடுகிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in