மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இன்றைய முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் அளவிற்கு மிக வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தக் காலத்து ரசிகர்களின் 'பல்ஸ்' என்ன என்பதை புரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்றபடி தன்னுடைய படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். டிவியில் வர்ணனையாளராக இருந்த போதே யு டியூப் என்பதையே இளம் தலைமுறையினருக்கு அதிகம் அறிமுகப்படுத்தியவர் சிவகார்த்திகேயன்தான். அவருடைய நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு அவரை நாயகனாகவும் வரவேற்க பெரிதும் உதவியது.
சமூக வலைத்தளங்களில் அதிக ஈடுபாட்டுடன் இருக்கும் சிவகார்த்திகேயன் இன்று டிவிட்டரில் 20 லட்சம் தொடர்பாளர்களைக் கொண்டவராக உயர்ந்துள்ளார். இதற்கு முன் ரஜினிகாந்த், தனுஷ், சித்தார்த், ஆகியோர் 20 லட்சம் தொடர்பாளர்களைப் பெற்றுள்ளவர்கள். அந்தப் பட்டியலில் சிவகார்த்திகேயன் இடம் பிடித்திருப்பது பெரிய சாதனை. ரஜினிகாந்த், தனுஷ், சித்தார்த் ஆகிய மூவருமே தமிழில் மட்டுமல்லாது ஹிந்தித் திரைப்படங்களிலும் நடித்தவர்கள். சித்தார்த் நிறைய தெலுங்குப் படங்களில் நடித்தவர். அவர்களுக்கெல்லாம் திரைத்துறையில் ஒரு பக்கபலம் இருந்தது.
ஆனால், ரசிகர்களின் துணையுடன் மட்டுமே சிவகார்த்திகேயன் முன்னேறி வருகிறார். அவருடைய டிவிட்டர் சாதனை வளரும் கலைஞர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.