மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
அமெரிக்காவில் எத்தனையோ படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு முழுப் படமும் அமெரிக்காவில் படமாக உள்ளது. ‛காவியன்' என பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லாஸ் வேகாஸ் நகரங்களில் படமாக உள்ளது. அறிமுக இயக்குனர் சாரதி இயக்கும் இப்படத்தில் ஷாம் கதாநாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தில் அமெரிக்காவில் நடிகையாக இருக்கும் ஸ்ரீதேவி குமார் ஒரு கதாநாயகியாக நடிக்க, இன்னொரு நாயகியாக 'மனம் கொத்தி பறவை' படதிதில் நடித்த ஆத்மியா நடிக்கிறார். இரண்டு நாயகிகளுக்கும் சமமான வகையில் இப்படத்தின் கேரக்டர்களும் கதையும் அமைக்கப்பட்டுள்ளதாம்.
தமிழ் தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் இப்படம் உருவாகவிருக்கிறது. அமெரிக்காவில் தொடர்ச்சியாக 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக 'காவியன்' படக்குழுவினர் நாளை (17-8-16) அமெரிக்கா செல்கின்றனர்.