Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாலு முதலாம் ஆண்டை கொண்டாடும் ரசிகர்கள்

14 ஆக, 2016 - 10:32 IST
எழுத்தின் அளவு:
Simbu-fans-celebrate-first-year-of-Vaalu-release

சிம்பு, ஹன்சிகா மற்றும் பலர் நடிக்க விஜய் சந்தர் இயக்கத்தில் கடந்த ஆண்டு இதே தினத்தில் வெளிவந்த படம் 'வாலு'. இந்தப் படம் வெளிவந்து இன்றுடன் ஒரு வருடம் ஆனதை முன்னிட்டு சிம்புவின் தீவிர (?) ரசிகர்கள் படத்தின் முதல் வருடக் கொண்டாட்டத்தை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள். பொதுவாக நன்றாக ஓடும் படங்களுக்கும் அல்லது வரவேற்பு பெற்ற படங்களுக்கும்தான் இது போன்ற மீண்டும் நினைவு கொள்ளும் கொண்டாட்டங்கள் நடைபெறும். ஆனால், மூன்று வருடங்களுக்கும் மேலாக படமாக்கப்பட்டு பல பிரச்சனைகளால், மிகவும் தாமதமாக கடந்த ஆண்டு இந்தப் படம் வெளிவந்தது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் போதுதான் சிம்புவும், ஹன்சிகாவும் காதலில் விழுந்தனர். ஆனால், படம் வெளிவருவதற்குள்ளாகவே அவர்களது காதல் முறிவை சந்தித்தது. இருந்தாலும் ஒரு பாடல் எடுக்க வேண்டிய சூழ்நிலையில் ஹன்சிகா காதல் முறிவையும் பெரிதுபடுத்தாமல் வந்து நடித்துக் கொடுத்து போனார். எப்படியோ ஒரு வழியாக வெளிவந்த படம் ஒரு வாரம் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் தோல்வியடைந்தது.


சிம்பு நடித்து இதுவரை வெளிவந்த படங்களிலேயே திரும்பவும் நினைத்துப் பார்க்க வைக்கும் ஒரே படமாக இருப்பது 'விண்ணைத் தாண்டி வருவாயா' மட்டுமே. ஆனால், சிம்புவின் ஆர்வக் கோளாறு ரசிகர்களுக்கு ஓடாத படத்தையும் கொண்டாட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது யார் என்று தெரியவில்லை.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in