ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் |
பசங்க, களவாணி, வாகைசூடவா என பல படங்களில் நடித்தவர் விமல். காவல், அஞ்சல படங்களுக்குப்பிறகு பூபதி பாண்டியன் இயக்கத்தில் மன்னர் வகையறா என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தை முதலில் தயாரித்த தயாரிப்பாளர் பின்னர் விலகிக்கொண்டாராம். அதனால் வேறு தயாரிப்பாளர் தேடியபோதும் படத்தை தயாரிக்க யாருமே முன்வரவில்லையாம். அதனால் தனது மார்க் கெட்டை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இப்போது தானே மன்னர் வகையறா படத்தை தயாரித்து நடித்து வருகிறார் விமல்.
அதோடு, முதலில் இந்த படம் தயாரிக்கப்பட்டபோது நடித்து வந்த நடிகர் நடி கைகளின் பட்டியலை டோட்டலாக மாற்றி விட்டார்களாம். அதன்காரணமாக இந்த படத்தின் நாயகியாக நடித்து வந்த ஆனந்தி படத்தில் இருந்து நீக்கப் பட்டு, இப்போது வேறொரு புதுமுக நடிகை நாயகியாக நடித்து வருகிறாராம். சில கேரக்டர் ஆர்ட்டிஸ்டுகளும் நீக்கப்பட்டு புதியவர்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே கமிட்டான காமெடியன்கள் ரோபோ சங்கர், யோகி பாபு ஆகியோர் மட்டும் நீக்கப்படவில்லையாம்.