மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
'தில்லுக்கு துட்டு' என்ற ஒரே ஒரு ஹிட் படத்தின் மூலம் வெற்றிகரமான ஹீரோக்களின் பட்டியலில் இணைந்துவிட்டார் சந்தானம். அந்தப் படத்திற்கு முன் அவர் நாயகனாக நடித்த படங்கள் வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. திரும்பவும் காமெடிக்கு வரத் தயக்கம் காட்டிய சந்தானம் 'தில்லுக்கு துட்டு' படம் எப்படியாவது திருப்புமுனையைக் கொடுத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.
சின்னத் திரையில் 'லொள்ளு சபா' நிகழ்ச்சி மூலம் சந்தானத்தை அடையாளம் காட்டிய ராம்பாலா பெரிய திரையிலும் சந்தானத்தை நாயகனாக அடையாளம் காட்டி அவருக்கு ஒரு திருப்புமுனையைத் தந்துவிட்டார். அதன் வெற்றி சந்தானத்தை இயக்குனர் செல்வராகவன் வரை கொண்டு சேர்த்துவிட்டது.
செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரெஜினா தற்போது செல்வராகவன் இயக்கி வரும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் ரெஜினாவின் நடிப்பைப் பார்த்த செல்வராகவன், சந்தானத்தை வைத்து இயக்க உள்ள படத்திலும் நாயகியாக்கியிருக்கிறார்.
தெலுங்கில் முன்னணி நாயகிகளின் பட்டியலில் உள்ள ரெஜினா, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்திற்குப் பிறகு தமிழில் ஒரு திருப்புமுனைக்காகக் காத்திருக்கிறார். 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் அவருக்கு தமிழில் ஒரு ரீ-என்ட்ரியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் - ரெஜினா நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.