மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகை ஹன்சிகாவுக்கு வருகிற 9ந் தேதி பிறந்த நாள். வழக்கம்போல இந்த ஆண்டும் தனது வளர்ப்பு குழந்தைகளுடன் தான் கொண்டாடப்போகிறார். என்றாலும் இந்த ஆண்டு ஒரு புதுமை செய்ய விரும்பினார். அதாவது தான் நடத்தி வரும் யூ டியூப் சேனலில் தனது பிறந்தநாளையொட்டி ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்க விரும்புவதாக அறிவித்தார்.
ரசிகர்கள் கேட்கும் கேள்விகளிலிருந்து 25 கேள்விகளுக்கு பதில் அளிக்க முடிவு செய்திருந்தார். இதனை அவர் அறிவித்த முதல் நாளே எட்டாயிரம் கேள்விகளை கேட்டு ஹன்சிகாவை திணறடித்து விட்டார்கள் ரசிகர்கள். இப்போது 10 ஆயிரம் கேள்விகளுக்கு மேல் வந்துள்ளதாம்.
உங்கள் அழகின் ரகசியம் என்ன? புன்னகையின் மர்மம் என்ன? சிம்புவுடன் மீண்டும் சேர்வீர்களா? ரஜினியுடன் நடிப்பீர்களா? தமிழ் நாட்டு குழந்தைகளை தத்தெடுப்பீர்களா? அழகை மட்டும் காட்டிச் செல்கிறீர்களே எப்போது நடிப்பீர்கள்? காதல் திருமணமா அப்பா அம்மா பார்க்கும் திருமணமா? யாரையாது காதலிக்கிறிர்களா? உங்கள் காதலன் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? என்பது மாதிரியான கேள்விகள்தான் அதிகமாக வந்திருக்கிறதாம். இதிலிருந்து 25 கேள்விகளை எப்படி தேர்வு செய்வது என்று திணறி வருகிறாராம் ஹன்சிகா.