மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தொடர்ந்து நம்ம இயக்குனர்கள் உருவாக்கிய கதைகளிலேயே நடித்துவந்த உதயநிதி, கடந்த முறை இந்திப்படமான 'ஜாலி எல் எல் பி' படத்தை தமிழில் 'மனிதன்' என்கிற பெயரில் ரீமேக் பண்ணி நடித்தார்.. ஓரளவு நல்ல பெயரும் அந்தப்படத்தால் கிடைத்தது.. சரி, ஆசைக்குத்தான் ரீமேக் படத்தில் நடிக்கிறார் என நினைத்தால், இப்போது மலையாளத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வெற்றிபெற்ற 'ஹேப்பி வெட்டிங்' என்கிற படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை தனது ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்காக பேசிக்கொண்டு இருக்கிறாராம் உதயநிதி..
இந்த 'ஹேப்பி வெட்டிங்' படம் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் 20 கோடி வசூலித்துள்ளது என்றும் இந்தப்படத்தின் இயக்குனர் ஓமருக்கு தனது படத்தை இயக்கும் வாய்ப்பை மம்முட்டி தந்துள்ளார் என்றும் ஏற்கனவே நாம் சொல்லியிருந்தோம்.. கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படத்தில் நடித்த காமெடி நடிகர்களை வைத்து அதே பாணியிலான காதல் கதை ஒன்றை செம ஜாலியாக சொல்லியிருந்தார்கள் இந்தப்படத்தில். இந்த வருடத்தின் 'சர்ப்ரைஸ் ஹிட்' என மலையாள வர்ணிக்கப்படும் இந்தப்படத்தில் உதயநிதியே கதாநயாகனாக நடிப்பதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதேபோல இந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கையும் தானே தான் இயக்குவேன் என்று படத்தின் இயக்குனர் ஓமரே சொல்லியிருக்கிறார்.