ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
ராஜமவுலி இயக்கத்தில் தெலுங்கு காமெடியன் சுனில் நாயகனாக நடித்த படம் மரியாத ராமண்ணா. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானம் நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து இப்போது முழுநேர ஹீரோவாகி விட்டார். தில்லுக்குத்துட்டு படத்தை அடுத்து சர்வர் சுந்தரம் படத்தில் நடித்து வரும் அவர், அதற்கடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இன்னும் சில கதைகளையும் கேட்டு வருகிறார்.
மேலும், தற்போது தெலுங்கு மரியாத ராமண்ணா படத்தில் நடித்த சுனில் பெரிய ஹீரோவாகி, சிக்ஸ் பேக் வைத்து நடிப்பதோடு, ஜூனியர் என்டிஆர் போன்ற ஹீரோக்களுக்கு இணையான அதிரடி நடனமும் ஆடி அசத்தி வருகிறாராம். அதைப்பார்த்த சந்தானத்துக்கும் இப்போது சிக்ஸ்பேக் ஆசை பிறந்திருக்கிறது. அதனால் தெலுங்கு காமெடியன் சுனிலைப்போலவே தானும் சிக்ஸ்பேக் வைப்பதற்கு தயாராகிக்கொண்டி ருக்கிறார். அதனால் செல்வராகவன் இயக்கும் படத்திலேயே சந்தானத்தை சிக்ஸ்பேக் நடிகராக பார்க்க வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள். ஆக, தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், பரத், அதர்வாவைத் தொடர்ந்து சிக்ஸ்பேக் பட்டியலில் சந்தானமும் இடம்பெறப்போகிறார்.