மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ் சினிமாவின் தலைசிறந்த திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் என்று பெயர் எடுத்தவர் இயக்குநர் மகேந்திரன். இவர் இயக்கிய படங்கள் சில தான்.... ஆனால் ஒவ்வொன்றும் புதுரகம். கமர்ஷியல் இயக்குநர்களுக்கு மத்தியில் உணர்வுப்பூர்வமான படங்களை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த இயக்குநர் மகேந்திரனுக்கு இன்று(ஜூலை 25ம் தேதி) 76வது பிறந்தநாள். பிறந்தநாளையொட்டி அவரைப் பற்றிய தொகுப்பு இதோ....
மகேந்திரனின் இயற்பெயர் ஜெ.அலெக்ஸாண்டர். ராமநாதபுரம் மாவட்டம், இளையாங்குடியில் பிறந்த இவர். மதுரை மற்றும் காரைக்குடியில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தார். சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாவிற்கு வந்தவர், ஆரம்பகாலத்தில் சினிமா கதாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், வசனகர்த்தவாகவும் இருந்தார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்ட பலரின் படங்களுக்கு கதை, வசனம் எழுதியிருக்கிறார். உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, ஜானி, மெட்டி உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார்.
இவர் இயக்கிய முதல் படமான முள்ளும் மலரும் படம் ரஜினியை ஒரு புதிய பாதைக்கு கொண்டு சென்றது என்றால் மிகையல்ல. ரஜினியின் சிறந்த 10 படங்களில் மகேந்திரனின் முள்ளும் மலருக்கும் எப்போதும் இடம் உண்டு. ரஜினிக்கு மிகவும் பிடித்த இயக்குநர்களில் மகேந்திரனும் ஒருவர்.
எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க திரைகதை, வசனம் போன்றவற்றை எழுதிவைத்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் இதனை திரைப்படமாக்க முடியாமல் போனது.
மகேந்திரன் இயக்கிய அனைத்து படங்களுக்கும் இளையராஜா தான் இசையமைத்துள்ளார்.
மகேந்திரனின் நெருங்கிய நண்பர் நடிகர் கமல்ஹாசன். மகேந்திரனின் முதல்படமான ‛முள்ளும் மலரும்' படத்தில் அவர் எதிர்பார்த்த ஒளிப்பதிவாளர் யாரும் கிடைக்காத சூழலில் பாலுமகேந்திராவை மகேந்திரனிடம் அறிமுகம் செய்து வைத்தவர் கமல் தான்.
கமலின் படங்களுக்கு கதை, வசனம் எழுதியிருந்தாலும் கமலின் ஒரு படத்தை கூட அவர் இயக்கவில்லை. சமீபத்தில் நடிகர் விஜய்யின் தெறி படத்தில் வில்லனாக நடித்து மிரட்டினார்.
பிறந்தநாளில் இயக்குநர் மகேந்திரனை வாழ்த்துவோம்! வாசகர்களாகிய நீங்களும் தங்கள் பிறந்தநாளை வாழ்த்தை இங்கு பதிவு செய்யலாம்.