'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
'மழை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த ஸ்ரேயா 'சிவாஜி' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்தார். ஆனால் அதற்கு பிறகு அவரது மார்க்கெட் மளமளவென சரிந்தது. 30 வயதை தாண்டிவிட்ட ஸ்ரேயாவுக்கு தற்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வாய்ப்புகளே வருகிறது. ஸ்ரேயாவின் பெற்றோர்களும் அவருக்கு திருமணம் செய்து வைக்க தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஸ்ரேயா 'த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (டிரிபிள் ஏ)' படத்தில் நடித்து வருகிறார். இதில் சிம்புவின் பிளாஷ் பேக் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்.
அதாவது கதைப்படி 1980களில் வரும் சிம்புவுக்கு ஜோடியாகவும், இன்னொரு சிம்புவுக்கு அம்மாவாகவும் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் தற்போது மதுரையை சுற்றியுள்ள பகுதியில் நடந்து வருகிறது. இதில் ஸ்ரேயா கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஸ்ரேயா, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு திடீரென்று வருகை தந்தார். நேராக சென்று மீனாட்சி அம்மனையும், சுந்தரேஸ்வரரையும் வணங்கியவர் கோவிலை நீண்ட நேரம் சுற்றிப் பார்த்து விதவிதமாக போட்டோக்களை எடுத்துக் கொண்டர். தன்னுடன் வந்த வழிகாட்டியிடம் கோவில் தல வரலாறு பற்றியும், சிற்பங்கள் பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டார். அப்போது எடுத்த படங்களை தனது பேஸ்புக்கிலும் வெளியிட்டுள்ளார்.
தனக்கு நல்ல முறையில் திருமணம் நடக்க வேண்டும் என்றும். இந்தப் படத்திற்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வரவேண்டும் என்றும் அவர் சிறப்பு பூஜை நடத்திதாக கோவில் வட்டாரங்கள் தெரிவிக்கறிது.