ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ |
ரஜினியின் கபாலி படத்தை பிரபலப்படுத்தும் நோக்குடன் முத்தூட் குழுமம் சார்பில் சிறப்பு வெள்ளி நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. கபாலி ரஜினியின் உருவம் பதித்த இந்த நாணய வெளியிட்டு விழா இன்று நடந்தது. இவ்விழாவில் கபாலி பட டைரக்டர் ரஞ்சித், தயாரிப்பாளர் எஸ்.தாணுவின் மகன் தாணு பரந்தாமன், முத்தூட் குழும நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாணய வெளியீட்டிற்கு பிறகு விழாவில் பேசிய இயக்குனர் ரஞ்சித், கபாலி படம் நன்றாக வந்துள்ளது. இந்த படத்தில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. எனக்கு பிடித்த படங்களில் ஒன்றாக கபாலி இருக்கும் என ரஜினியே கூறி உள்ளார். ரஜினியின் மறக்க முடியாத படங்களின் வரிசையில் கபாலியும் இடம்பிடிக்கும். இவ்வாறு ரஞ்சித் பேசினார்.