மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
லிங்கா படத்திற்கு பிறகு கன்னட நடிகர் சுதீப்பை வைத்து முடிஞ்சா இவனை புடி -என்ற படத்தை இயக்கும்போதே இங்க என்னா சொல்லுது, நினைத்தது யாரோ, சிகரம் தொடு, ஆடாம ஜெயிச்சோமடா, தங்கமகன் ஆகிய படங்களிலும் நடித்து வந்தார் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார். குறிப்பாக, தங்க மகன் படத்தில் தனுசுக்கு அப்பாவாக நடித்தார். அந்த செண்டிமென்ட் வேடம் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது.
அதனால் இப்போது பேமிலி செண்டிமென்ட் வேடங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். அதையடுத்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்திலும் அவருக்கு அப்பாவாக நடித்துள்ளார் ரவிக்குமார். அதேபோல் விஜயசேதுபதி நடித்துள்ள றெக்க படத்திலும் அப்பா வேடத்தில் நடித்துள்ளார். இதையடுத்து மேலும் சில படங்களில் கமிட்டாகியிருக்கிறாராம். இப்படி கே.எஸ்.ரவிக்குமார் முன்னணி ஹீரோக்களின் படங்களில் அப்பா வேடங்களில் நடிக்கத் தொடங்கியிருப்பது ஏற்கனவே அப்பா வேடங்களில் நடித்து வந்த நடிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.