மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இந்தாண்டு இறுதியில் நடக்க இருந்த, தெலுங்கு நடிகர் நாக சைதன்யா - நடிகை சமந்தா திருமணம், 2018ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் முதல் மனைவி லட்சுமி ராமா நாயுடு; இவர்களின் மகன், நடிகர் நாக சைதன்யா. இவரும், நடிகை சமந்தாவும் காதலித்து வந்தனர். இருவரின் குடும்பத்தினரும், திருமணத்திற்கு பச்சை கொடி காட்டினர். இருவரும், வரும் டிசம்பரில் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் பரவியது. சமந்தாவும், புதிய படம் ஒப்புக் கொள்வதை தவிர்த்து வந்தார்.
ஏற்கனவே ஒப்புக் கொண்ட, வடசென்னை உள்ளிட்ட படங்களில் இருந்தும் விலகினார். இந்நிலையில், இந்தாண்டு இறுதியில் நடக்க இருந்த திருமணத்தை, 2018ம் ஆண்டுக்கு தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷுடன் சமந்தா நடிக்க இருந்த, வடசென்னை படம், மூன்று பாகங்களை கொண்டதால் அதில் நடிக்க முடியாமல் போனதாக சமந்தா தரப்பில் சொல்லப்படுகிறது.
தெலுங்கில், நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்., உடன் சமந்தா நடித்துள்ள, ஜனதா கேரேஜ் படம் விரைவில் வெளியாக உள்ளது. சமந்தா - நாக சைதன்யா இணைந்து நடிக்கும் புதிய படத்தை, கல்யாண் கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ளார். தமிழில், இரண்டு படங்களில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி உள்ளார். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. நாக சைதன்யாவும், மலையாளத்தில் வெற்றி பெற்ற, பிரேமம் படத்தின் தெலுங்கு, ரீமேக்கில் கவனம் செலுத்தி வருகிறார். எனவே, தற்போதுள்ள படங்களை முடித்து விட்டு, 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள, நாக சைதன்யாவும் சமந்தாவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.