Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாரிப்பாளரான விக்ரம் பிரபு : முதல்படம் ‛நெருப்புடா'

06 ஜூலை, 2016 - 11:36 IST
எழுத்தின் அளவு:
Vikram-Prabhu-turn-as-Producer,-First-movie-titled-as-Nerupuda

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன், நடிகர் பிரபுவின் மகன் எனும் அடையாளத்தோடு ‛கும்கி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் விக்ரம் பிரபு. தொடர்ந்து ஆக்ஷ்ன், காமெடி என பலவிதமான படங்களில் பயணித்து, வளர்ந்து வரும் விக்ரம்பிரபு, இப்போது அடுத்தப்படியாக தயாரிப்பாளராக அவதரித்திருக்கிறார்.


‛பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருக்கும் விக்ரம் பிரபு, தனது முதல் தயாரிப்பாக வெளிவரும் படத்தில் தானே ஹீரோவாகும் நடிக்கிறார். படத்திற்கு ரஜினியின் கபாலி படத்தில் வரும் ‛நெருப்பு டா' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். விக்ரம் பிரபு தீயணைப்பு வீரராகவும், ரஜினியின் தீவிர ரசிகராகவும் நடிக்கிறார்.


விக்ரம் பிரபு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இவர்களுடன் பொன்வண்ணன், நான்கடவுள் ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், மதுசூதனன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ரோமியோ ஜூலியட் இயக்குநர் லக்ஷ்மனின் உதவியாளராக இருந்த அசோக் குமார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.


விக்ரம் பிரபுவின் பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனமும், சந்திரா ஆர்ட்ஸ், சினி இனோவேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களும் இணைந்து ‛நெருப்புடா' படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in