'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
ஹாலிவுட்டின் பிரபல காமெடி நடிகர் பட் ஸ்பென்சர் காலமானார். அவருக்கு வயது 86. ரோம் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த பட் ஸ்பென்சர், வயது முதிர்வு காரணமாக இறந்தார். இத்தகவலை பட்டின் மகன் தெரிவித்திருக்கிறார்.
இத்தாலியை சேர்ந்தவரான பட் ஸ்பென்சர், 1929ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி பிறந்தார். நீச்சலில் வித்கரான பட் ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நீச்சல் போட்டிகளில் பங்கேற்று, சாதனை படைத்துள்ளார். மேலும் நீச்சல் பயிற்சியாளராகவும் பணியாற்றி உள்ளார்.
நீச்சல் பயிற்சி மட்டுமல்லாது நடிப்பிலும் ஆர்வம் மிக்க பட் ஸ்பென்சர், 1960ம் ஆண்டு ‛குவல் பென்டஸ்மா டி மியா மரிட்டோ' என்ற படத்தில் முதன்முறையாக நடித்தார். ஆரம்பத்தில் சின்ன சின்ன படங்களில் நடித்து கவனிக்கப்படாமல் இருந்து வந்த பட் ஸ்பென்சர், பின்னர் டிரென்ஸ் ஹில் உடன் இணைந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர்களது கூட்டணியில் முதன்முதலில் வெளியான படம் ‛ஹனிபாய்'. இப்படம் வெற்றி பெற அதன்பின்னர் இவர்களது கூட்டணியில் உருவான அனைத்து படங்களும் வெற்றி பெற்றன. லாரல் - ஹார்டி போன்று பட் ஸ்பென்சர் - டிரென்ஸ் ஹில்லும் காமெடியில் அசத்தி வந்து ரசிகர்களை கவர்ந்தனர்.
சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பட் ஸ்பென்சர் நடிப்பில் வெளியான ‛‛டிபுள் டிரபுள், கோ பார் இட், ஏஸ் ஹை, தே கால் மீ டிரினிட்டி, டிரினிட்டி இஸ் ஸ்டில் மை நேம்'' போன்ற படங்கள் மிகவும் பிரபலமானவை.
பட் ஸ்பென்சருக்கு மூன்று வாரிசகளும், ஐந்து பேரக்குழந்தைகளும், 6 கொள்ளுபேரக் குழந்தைகளும் உள்ளனர்.