மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ரஜினிகாந்த் இன்னமும் ரசிகர்களின் பேராதரவோடு சூப்பர் ஸ்டாராகவே இருந்து கொண்டிருந்தபோதும், அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் யார் என்கிற போட்டி விஜய்-அஜீத்துக்கிடையே நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, இது சம்பந்தமாக அவர்களது ரசிகர்கள் இணையதளங்களில் பெரிய அளவில் மோதிக்கொண்டும் வருகிறார்கள். இந்த நிலையில், நேற்று விஜய்யின் 43-வது பிறந்த நாள் என்பதால் அவருக்கு பல சினிமா பிரபலங்கள் தங்களது டுவிட்டரில் வாழ்த்து கூறினார்கள். அதேபோல் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிர காசும் கூறியிருந்தார்.
அவர் விஜய்க்கு விடுத்துள்ள பிறந்த நாள் செய்தியில், அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று டுவிட் செய்திருந்தார். ஆனால் அதையடுத்து, தமிழ் சினிமாவில் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும்தான் என்று கூறிவரும் ரஜினி ரசிகர்கள் ஜி.விக்கு எதிராக கொடி பிடித்துள்ளனர். அதோடு, அடுத்த சூப்பர் ஸ்டார் அஜீத்தான் என்று தொடர்ந்து முழங்கி வரும் அஜீத் ரசிகர்கள், ஜி.வி.பிரகாஷை இணைய தளங்களில் சூடான வார்த்தைகளால் வசைபாடி வருகிறார்கள். என்றாலும் தான் சொன்ன கருத்தில் இருந்து மாறுபடவில்லை ஜி.வி.பிரகாஷ். அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்ற தனது கருத்தில் அவர் உறுதியாக இருந்து வருகிறார்.