மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ரஜினிமுருகன் ஹிட்டுக்குப்பிறகு தனுசுடன் தொடரி படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், தற்போது விஜய்யின் 60-வது படத்தில் நடித்து வருகிறார். அதோடு 2 தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், விஜய் படம் குறித்து எந்த தகவலும் வெளியில் லீக்அவுட் செய்யக்கூடாது என்ற கண்டிசன் இருப்பதால் அதைப்பற்றி எதுவும் பேசாத அவர், தனுஷின் தொடரி படத்தைப்பற்றி பக்கம் பக்கமாக பேசித்தள்ளுகிறார். அந்த படத்தின் டைரக்டர் பிரபுசாலமன் ரொம்ப பொறுமையானவர். நாம் என்னதான் சொதப்பினாலும், அவர் எதிர்பார்க்கிற நடிப்பு வருவதுவரை பொறுமையாக கேட்டு வாங்குவார். அவரிடத்தில் நடிப்பின் நுட்பங்களை நிறைய நான் கற்றுக்கொண்டேன்.
அதேபோல், தனுசுடன் நடித்த அனுபவம் ரொம்ப புதுமையானது. அவர் ஒரு மிகப்பெரிய நடிகர். என்றாலும், நான் முதல் நாள் நடித்ததை தள்ளி நின்று பார்த்த அவர் என்னிடம் வந்து, ரொம்ப நல்லா நடிக்கிறீங்கம்மா -என்று சொன்னார். அது எனக்கு பெரிய உற்சாகத்தைக்கொடுத்தது. அதோடு, தொடரி படத்தில் அவர்தான் ஹீரோ. என்றபோதும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ்தான் மெயின் ரோலில் நடித்திருக்கிறார். அவரைச்சுற்றித்தான் கதை என்கிறார். இப்படி சொல்வதற்கே ஒரு பெருந்தன்மை வேண்டும். ஆனால் தொடரி படத்தில் நான் ஒரு சிறிய பார்ட்டுதான். நடிகையின் டச்சப் பெண்ணாக, தனுஷின் காதலியாக நடித்திருக்கிறேன் என்கிறார் கீர்த்தி சுரேஷ்.