மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஏவிஎம் தயாரித்த 'ராணி' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சச்சு. அதன் பிறகு சொர்க்கவாசல், காதல் ஜோதி, அவன் பித்தனா, தேவதாஸ், மாயாபஜார் என 50க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் படங்களில் நடிக்கும்போது அவர்கள் சச்சுவை மடியில் தூக்கி வைத்து கொஞ்சுவார்கள்.
சச்சு வளர்ந்து ஆளான பிறகு ஹீரோயினாக நடிக்க முடிவு செய்தார். மற்ற நடிகைகளை விட அழகாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தாலும் சச்சுவுடன் ஜோடியாக நடிக்க எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகியோர் மறுத்துவிட்டார்கள். எம்.ஜி.ஆருடன் ஒரு படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தபோது “சச்சு என் மகள் மாதிரி அவளுடன் நான் எப்படி கட்டிப்பிடித்து காதல் செய்ய முடியும்” என்று கூறிவிட்டார். எம்.ஜி.ஆரே மறத்து விட்டால் மற்றவர்களும் நடிக்கவில்லை. அதன் பிறகுதான் அப்போது புதுமுகமாக அறிமுமான சிவகுமாருன் ஜோடியாக நடித்தார் சச்சு. 'வீரத் திருமகன்', 'அன்னை இல்லம்' படங்களில் ஹீரோயினாக நடித்த சச்சு அதன் பிறகு 'காதலிக்க நேரமில்லை' படத்தின் மூலம் காமெடி நடிகை ஆனார்.