மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கௌதம் மேனன் படம் என்றாலே இளைஞர்கள் மத்தியில் ஒரு ஆர்வம் தொற்றிக் கொள்கிறது. 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்திலிருந்து அந்த ஆர்வத்தை படத்துக்குப் படம் அதிகமாக்கிக் கொண்டே வருகிறார். சிம்புவுக்கு 'வாலுவும், ஆளுவும்' கைவிட்ட பின் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவரும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தைத்தான் அதிகம் எதிர்பார்த்திருக்கிறார். இந்தப் படத்தை முடிப்பதற்கு முன்னரே கௌதம் மேனன், தனுஷ் இணைந்து 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை ஆரம்பித்தது பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
'அச்சம் என்பது மடமையடா' படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திற்கு யார் இசையமைக்கப் போகிறார்கள் என்பதை கௌதம் மேனன் இதுவரை சொல்லவேயில்லை. ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் இருவரும்தான் கௌதமின் ஆஸ்தான இசையமைப்பாளர்கள் பட்டியலில் எப்போதும் இருக்கிறார்கள். நடுவில் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் இளையராஜாவுடன் இணைந்து அழகான பாடல்ளை வழக்கம் போல தந்த கௌதம் படத்தைத்தான் சொதப்பி விட்டார்.
அந்தப் படத்தின் உருவாக்கத்தின் போதே கௌதமுக்கும், யுவன்ஷங்கர் ராஜாவுக்கும் நல்ல நட்பு உருவானது. இப்போது 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திற்கு யுவன்தான் இசை என்று கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது.
விரைவில் இது பற்றிய அறிவிப்பு முறையாக வெளியாகும் என்று தெரிகிறது. கௌதம் - தனுஷ் எப்படி முதல் கூட்டணியோ அதே போல இந்தக் கூட்டணியில் யுவனும் இணைந்தால் 'வேற ஒரு ரேஞ்ச்'சில் படம் இருக்கும் என்பது மட்டும் உறுதி.