மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ரஜினிகாந்த் நடித்த படங்களின் தலைப்புகளை மீண்டும் புதிய படங்களுக்கு சூட்டி வரும் நிலையில் இப்போது ஜெய்சங்கர் நடித்த ஒரு படத்தின் தலைப்பும் புதிய படம் ஒன்றுக்கு சூட்டப்பட்டுள்ளது.
தனுஷ் நடிப்பில் 'தொடரி' படத்தை தயாரித்து வரும் 'சத்யஜோதி ஃபிலிம்ஸ்' டி.ஜி.தியாகராஜன் விக்ரம் பிரபு, நடிப்பில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தை 'சுந்தரபாண்டியன்', 'இது கதிர்வேலன் காதல்' ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார்.
பெயரிடப்படாமலே படப்பிடிப்பு இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இப்படத்திற்கு இப்போது 'முடி சூடா மன்னன்' என்று பெயர் வைத்துள்ளார்கள். 1978-ல் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி, மனோரமா ஆகியோர் நடிப்பில் விட்டல் இயக்கத்தில் இதே பெயரில் ஒரு படம் வெளியாகியுள்ளது. அந்தப் பெயரை தேடிப்பிடித்து விக்ரம் பிரபு படத்துக்கு தற்போது சூட்டியுள்ளனர்.
தற்போது 'வாகா', 'வீரசிவாஜி' ஆகிய படங்களில் நடித்து வரும் விக்ரம் பிரபு நடிப்பில் மூன்றாவதாக 'முடி சூடா மன்னன்' படம் வெளிவருமாம். இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தில் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார்.
மஞ்சிமா மோகன் தவிர்த்து இன்னொரு ஹீரோயின் கேரக்டரும் இப்படத்தில் உண்டாம். அந்த கதாநாயகிக்கான தேர்வு தற்போது நடந்து வருகிறது. 'தொடரி', 'முடி சூடா மன்னன்' படங்களுடன் வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படமொன்றையும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் ஒரே நேரத்தில் மூன்று படங்களைத் தயாரிப்பது படத்துறையில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.