மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான நெப்போலியன் நீண்ட இடைவேளைக்கு பின், சினிமாவில் கவனம் செலுத்த துவங்கி உள்ளார். புது நெல்லு புது நாத்து படம் மூலம், தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நெப்போலியன். அதன் பின், சீவலப்பேரி பாண்டி, விருமாண்டி, தசாவதாரம் உள்ளிட்டபல படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் மார்க்கெட் வீழ்ச்சி அடைந்த போது, அரசியலுக்கு தாவிய நெப்போலியன், தி.மு.க.,வில் சேர்ந்தார். லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்று, மத்திய அமைச்சரவையிலும் இடம் பிடித்தார். அதன் பின், தி.மு.க.,வில் இருந்து விலகினார். தற்போது பா.ஜ.,வில் சேர்ந்துள்ள நெப்போலியன், மீண்டும் சினிமா பக்கம் திரும்பியுள்ளார்.
தெலுங்கு படம் ஒன்றிலும், தமிழில், நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் உடன், முத்துராமலிங்கம் என்ற படத்திலும், நெப்போலியன் நடித்து வருகிறார். இவற்றின் படப்பிடிப்பில், பிசியாக உள்ள நெப்போலியன், சினிமாவில் மீண்டும் ஒரு, ரவுண்ட் வர ஆர்வமாக உள்ளார்.