'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
சரண் இயக்கத்தில் அஜீத் நடித்த படம் அசல். இந்த படத்தில் அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் அஜீத் நடித்திருந்தார். அஜீத்துக்கு ஜோடியாக பாவனா நடித்த இந்த படத்தை சிவாஜி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதன்பிறகு இப்போதுவரை சிவாஜி பிலிம்ஸ் படமே தயாரிக்கவில்லை. சிவாஜியின் பேரன் துஷ்யந்த் தயாரிக்கும் மீன் குழம்பும் மண்வாசனையும் படத்தைகூட அவர் வேறு பேனரில்தான் தயாரிக்கிறார்.
இந்த நிலையில், 2010-ல் அஜீத் அசல் படத்தை தயாரித்த சிவாஜி பிலிம்ஸ், 2017-ல் விஜய் நடிக்கும் அவரது 61-வது படத்தை தயாரிக்கயிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. அது இப்போது இன்னும் உறுதிபட வெளியாகியிருக்கிறது. அந்த படத்தை அட்லி இயக்குகிறார் என்று கூறப்பட்டபோதும், நெல்சன் இயக்குவதாகவும் ஒரு செய்தி தெரிவிக்கிறது. ஆக, சிவாஜியுடன் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய ஒன்ஸ்மோர் படத்தில் இணைந்து நடித்த விஜய், இப்போது சிவாஜிகணேசன் உருவாக்கிய சிவாஜி பிலிம்ஸ் படத்தில் முதன்முறையாக நடிக்கப்போகிறார்