மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி, நான் படத்தின் மூலம் நடிகராகவும் அவதரித்தார். தன்னுடைய வித்தியாசமான கதையம்சத்தினாலும், தனித்துவமான நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்து வரும் விஜய் ஆண்டனி, சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக, மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் சைத்தான் என்ற படம் வெளியாக உள்ளது.
புதுமுக இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இந்த படத்தில், விஜய் ஆண்டனி சாப்ட்வேர் இன்ஜினியராக நடிக்க, அருந்ததி நாயர், பைக் பந்தயங்களில் கலக்கி கொண்டிருக்கும் அலிஷா அப்துலா மற்றும் மீரா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சைத்தான் படம் விஜய் ஆண்டனி கூறியிருப்பதாவது... படத்திற்கு படம் என்னுடைய தோற்றத்தில் கவனம் செலுத்துவதை விட, எப்படி வலுவான திரைக்கதையை கொண்டு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்வது என்பதில் தான் நான் அதிக நாட்டம் செலுத்தி வருகிறேன். என்னை பொறுத்தவரை கதையை விட கதையின் கரு தான் ஒரு படத்தின் வெற்றியை நிர்ணைக்கும். அந்த வகையில் நான் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த சைத்தான் திரைப்படம், கண்டிப்பாக மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு அனைத்து வகையிலும் இருக்கும் என நம்புகிறேன்.
என் படங்களுக்கு எதிர்மறையான தலைப்புகளை நான் தேர்வு செய்யவில்லை. அவை அனைத்தும் தாமாகவே அமைகிறது. இந்த படத்தின் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, ஒரு அறிமுக இயக்குனர் போல் இல்லாமல் அனுபவம் வாய்ந்த இயக்குனராக செயல்பட்டுள்ளது படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.