விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிகராக அறிமுகமான விஷ்ணு ஆரம்பத்தில் சில மொக்கப்படங்களில் நடித்தார். அதனால் க்ளிக்காகாமலே இருந்தார். அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட விஷ்ணு, 'நீர்பறவை', 'முண்டாசுப்பட்டி', 'இன்று நேற்று நாளை' போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். அதனால் கமர்ஷியலாக வெற்றியையும் பெற்றார். அதோடு தன் பெயரை விஷ்ணு விஷால் என்றும் மாற்றிக் கொண்டார்.
விஷ்ணு முதன் முதலாக நடித்திருக்கும் ஒரு முழு நீள கமர்ஷியல் படம் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்'. இப்படத்தை எழில் இயக்கியிருக்கிறார். இயக்குநர் எழிலும், விஷ்ணு விஷாலும் முதன் முதலாக இணைந்து தயாரித்துள்ள இப்படம் அடுத்த மாதம் (ஜூன்) 3-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
வழக்கமாக எழில் இயக்கும் படங்களுக்கு டி.இமான்தான் இசை அமைப்பார். இப்படத்திற்கு பெரிய சம்பளம் கேட்டதால், அவரை தவிர்த்துவிட்டு சத்யாவை கமிட் பண்ணினார். இப்படத்தின் மூலம் எழிலும், சத்யாவும் முதன் முதலாக இணைந்துள்ளார். 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படம் இயக்குநர் எழிலுக்கு 10 ஆவது படம். அவருக்கு மட்டுமல்ல விஷ்ணுவுக்கும் இது 10 ஆவது படம். விஷ்ணு விஷால், எழில் இவர்களிருவருக்கு மட்டுமல்ல, இசையமைப்பாளர் சத்யாவுக்கும் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படம் 10-ஆவது படமாம்.
என்னே ஒரு ஒற்றுமை....!