'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் |
விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து, தயாரித்து சமீபத்தில் வெளியான படம் 'பிச்சைக்காரன்'. சசி இயக்கத்தில் உருவான இப்படம் மிகப்பெரியவசூல் சாதனை செய்ததோடு, விமர்சன ரீதியாகவும் பேசப்பட்டது. பிச்சைக்காரன் படத்தை அடுத்து விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் - சைத்தான். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.
கபாலி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை காப்பியடித்ததுபோல் வடிவமைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது ஒருபக்கம் இருக்க, பிச்சைக்காரன் படம் சமீபத்தில் தெலுங்கில் 'பிச்சகாடு' என்ற பெயரில் வெளியாகி உள்ளது. 'பிச்சைக்காரன்' படத்துக்கு தமிழில் கிடைத்த வரவேற்பைப் போலவே தெலுங்கில் 'பிச்சகாடு' படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது!
விஜய் ஆண்டனி நடித்து ஏற்கெனவே தெலுங்கில் வெளியான படங்களை விட இப்படம் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி நடிப்பில் இதற்கு முன் அங்கு வெளியாகிய படங்களை விட இப்படம் வசூலில் பெரும் சாதனை படைக்கும் என்றும் என்றும் சொல்லப்படுகிறது. 'பிச்சகாடு'வை அடுத்து சைத்தான் படமும் தெலுங்கில் வெளியாக உள்ளது.