மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா முதலானோர் நடித்துள்ள படம் - 'இறைவி'. இப்படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டநிலையில் தற்போது ஜூன் 3-ஆம் தேதி ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளனர். கார்த்திக் சுப்பராஜின் 'இறைவி' மாறுபட்ட ஒரு கதையம்சம் கொண்ட படம் என்று சொல்லப்படுகிறது.
சமீபத்தில் தணிக்கையான இறைவி படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ்தான் வழங்கியது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய முதல் படமான 'பீட்சா', இரண்டாவது படமான 'ஜிகர்தண்டா' ஆகிய படங்களுக்கும் சென்சாரில் யு/ஏ சான்றிதழ்தான்தான் வழங்கப்பட்டது. இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய மூன்றாவது படத்திற்கும் யு/ஏ சான்றிதழ் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இறைவி படத்துக்கு இரண்டு வாங்களுக்கு முன் அதாவது வருகிற 20-ஆம் தேதி விஷால், ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்துள்ள 'மருது' படம் ரிலீசாகவிருக்கிறது.
இப்படத்தை இயக்கியுள்ள முத்தையாவின் முதல் படமான 'குட்டிப்புலி'க்கும், இரண்டாவது படமான 'கொம்ப'னுக்கும் சென்சாரில் 'யு/ஏ' சான்றிதழ்தான் வழங்கப்பட்டது. தற்பேது மருது படத்துக்கும் 'யு/ஏ' சான்றிதழ்தான் கிடைத்திருந்தது.
கார்த்திக் சுப்பராஜ், முத்தையா இருவரின் படங்களும் 'யு/ஏ' சான்றிதழ் பெற்றுள்ளதால் வரிவிலக்கு கிடைக்காது. எனவே விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.