ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி |
ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் வீரசிவாஜி. விக்ரம்பிரபு, ஷாம்லி நடிக்கிறார்கள். கணேஷ் விநாயக் இயக்குகிறார், இமான் இசை அமைக்கிறார். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. விக்ரம் பிரபுவின் குத்தாட்ட பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட வேண்டியது இருக்கிறது.
இந்த குத்துப் பாடலை அனேகன் படத்தில் டங்காமாரி ஊதாரி பாடலை எழுதிய ரோகேஷ் எழுதியுள்ளார். கானா பாடலான இதனை முதலில் மரணகானா விஜய் அல்லது கானா பாலாவை பாட வைக்க முடிவு செய்தனர். ஆனால் கானா பாடலை சிம்புவை பாட வைத்தால் வித்தியாசமாக இருக்கும் என்று முடிவு செய்த இமான், அவரையே அழைத்து பாட வைத்து நேற்று பாடலை பதிவு செய்து முடித்து விட்டார். இந்தப் பாடல் 2016ன் டாப் குத்துப்பாடலாக இருக்கும் என்கிறார் தயாரிப்பாளர் நந்தகோபால்.