மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடித்துக்கொண்டிருந்த வடிவேலுவை, தெனாலிராமன், எலி படங்களின் தோல்வி மீண்டும் காமெடிய னாக்கியிருக்கிறது. அந்த வகையில், சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் கத்திச்சண்டை படத்தில் அவர் மீண்டும் காமெடியனாக அரிதாரம் பூசவிருக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. வடிவேலு சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் மே மாதம் 29-ந்தேதில் முதல் படமாக்கப்படுகிறது.
இப்படத்தில் வடிவேலு ஒரு டாக்டராக நடிக்கிறார். அவருடன் தாடி பாலாஜி உள்பட இரண்டு காமெடியன்களும் இணைந்துள்ளனர். மற்றபடி இதே படத்தில் புரோட்டா சூரியும் நடித்தபோதும் அவருக்கு ஒரு சிறிய வேடம்தானாம். வடிவேலு சம்பந்தப்பட்ட காமெடி ட்ரேக்கில் அவருக்கு இடமில்லையாம். அதோடு, ரீ-என்ட்ரியிலும் கலக்கி விட வேண்டும் என்று நினைக்கும் வடிவேலு, டைரக்டரிடத்தில் கதை மற்றும் தனக்கான கேரக்டர் பற்றி கேட்டவர், அதில் தன் பங்குக்கு என்னென்ன விசயங்களை புகுத்தலாம் என்கிற ஆலோசனையும் செய்து கொண்டிருக்கிறாராம்.
இந்த படத்தை அடுத்து, பி.வாசுவின் சந்திரமுகி-2விலும் நடிக்கிறார் வடிவேலு. சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் இணைந்து காமெடி செய்தவர், இந்த இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்சுடன் இணைந்து காமெடி செய்கிறார். சந்திரமுகி-2 கன்னடத்தில் சிவலிங்கா என்ற பெயரில் இயக்கிய பி.வாசு. அதை தமிழில் ரீமேக் செய்கிறாராம். இதுகுறித்து ஏற்கனவே லாரன்சிடம் பேசிவிட்டவர், இப்போது வடிவேலுவிடம் பேசி வருகிறார்.