மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பல வருட போராட்டத்துக்கு பிறகு 'நாய்கள் ஜாக்கிரதை' படத்தின் வெற்றியை 'போக்கிரி ராஜா' படத்தின் தோல்வியில் தொலைத்துவிட்டார் சிபிராஜ். தொலைத்த வெற்றியை மீண்டும் அடைய, இப்போது நல்ல கதைகளை தேடிப்பிடித்து அதில் நாயகனாக நடிக்க தீர்மானித்து இருக்கிறார். அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ஹாரர் காமெடி படமான 'ஜாக்சன் துரை' விரைவில் வெளியாகவிருக்கிறது.
தெலுங்கில் வெற்றிபெயற்ற 'க்ஷணம்' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையையும் சிபிராஜ் வாங்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதிக்குள் துவங்கும் என சொல்லப்பட்டநிலையில், தற்போது புதிய படமொன்றிலும் நடித்து வருகிறார் சிபிராஜ். இப்படத்தை, ஈரம் அறிவழகனிடம் அசோஷியேட்டாகப் பணிபுரிந்த மணி சேயோன் என்பவர் இயக்குகிறார்.
'நாய்கள் ஜாக்கிரதை' படத்தில் பெல்ஜியம் ஷெப்பர்டு நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததுபோலவே, மணி சேயோன் இயக்கும் படத்தில் மீன் ஒன்று முக்கிய கேரக்டரில் நடிக்கிறதாம். இப்படத்தில் ஒரு டாக்டர் வேடம் உள்ளதாம். இதில் இயக்குநர் நலன் குமாரசாமி நடிக்கிறார். மீன்களுக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டராக நலன் குமாரசாமி நடிக்கிறார்.