மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தேர்தல் நெருங்குவதால் தேர்தல் தொடர்பான படங்களும் வரிசை கட்டுகிறது. 13ந் தேதி வெளிவருகிற பாபி சிம்ஹாவின் கோ 2 அரசியல் படம். அடுத்து வருகிறது இணைய தலைமுறை என்ற படம். இந்தப் படம் ஓட்டுப்போடாமல் டிமிக்கி கொடுக்கும் வாக்காளர்களையும், ஓட்டுப்போட வைக்க ஒரு யோசனையை சொல்கிறதாம்.
இதுபற்றி படத்தின் இயக்குனர் ஈஸ்வர் கூறியதாவது: ஜனநாயக நாட்டின் மிக முக்கியமானது ஓட்டுப்போடுவது. ஆனால் அது மக்களுக்கு தெரிவதில்லை. ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்று இருந்து விடுகிறார்கள். நான் ஒருத்தன் ஓட்டுப்போடாவிட்டால் என்ன குடிமுழுகி போய்விடும் என்று நினைக்கிறார்கள். அந்த நினைப்பு தவறு என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிற படமாக இணைய தலைமுறை உருவாகி உள்ளது.
மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை செய்யாவிட்டால் ஒரு குடும்பமும், ஒரு நாடும் எப்படி சீரழிகிறது என்பதை அழுத்தம் திருத்தமாகவும், அதே நேரத்தில் பிரச்சார நெடியில்லாமல் கமர்ஷியலாகவும் சொல்கிறேன். படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஓட்டளிக்க வேண்டும் என்கிற எண்ணம் உருவாகும். என்கிறார் இயக்குனர் ஈஸ்வர்.
இணைய தலைமுறை படத்தில் அஸ்வின், மனிஷாஜித் ஹீரோ, ஹீரோயினாக நடித்திருக்கிறார்கள். ஆரோ ஒளிப்பதிவு செய்துள்ளார், டி.ஜே.கோபிநாத் இசை அமைத்துள்ளார். மாறன் கிரியேஷன் சார்பில் பெ.இளந்திருமாறன் தயாரித்துள்ளார். படத்தை தேர்தலுக்கு முன்பாக வருகிற 13ந் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.